- அங்கன்வாடி
- கண்டக்காடு
- கடலூர்
- குண்டு உப்பலவாடி பஞ்சாயத்து
- கடலூர் பஞ்சாயத்து யூனியன்
- தொகுதி சட்டமன்றம்
கடலூர் : கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது குண்டு உப்பலவாடி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கண்டகாடு கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை தொடர்ந்து ரூ.17.5 லட்சம் மதிப்பில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கடலூர் ஐயப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டியன், மோகனாம்பாள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கல்வி குழு தனஞ்செயன் வரவேற்றார்.
விழாவில் உதவி பொறியாளர் வசந்தகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி மதியழகன் மற்றும் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ஆதிபெருமாள் மற்றும் வீராசாமி, அமிர்தலிங்கம், பிரபு, ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் செந்தில் நன்றி கூறினார்.

