×

மக்கள் குறைதீர் கூட்டம் 367 மனுக்கள் பெறப்பட்டன

 

திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 367 மனுக்கள் பெறப்பட்டன.
திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு டிஆர்ஓ ஜெயபாரதி தலைமை வகித்தார். அதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 367 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் ஹென்றி பீட்டர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுகுமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Dindigul ,People's Reduction Day ,Dindigul District Governor's Office ,Dindigul People's Day Meeting ,Collector ,Office ,DRO Jayabharati ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்