×

சட்டமன்ற தேர்தல் பணிக்காக 600 ராணுவ வீரர்கள் தமிழகம் வருகை

 

சென்னை: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பணிக்காக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 600 ராணுவ வீரர்கள் தமிழகம் வந்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் சம்பந்தமான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடைபெறும் போது பல்வேறு கம்பெனிகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நேற்று உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐந்து கம்பெனி ராணுவ வீரர்கள் சுமார் 500 பேர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 70 பேர் என மொத்தம் சுமார் 600 பேர் பெரம்பூர் ரயில் நிலையம் வந்தனர்.

இவர்களில் இரண்டு கம்பெனி வீரர்கள் ஆவடிக்கும், இரண்டு கம்பெனி வீரர்கள் தாம்பரத்திற்கும், ஒரு கம்பெனி வீரர்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கும், சிஆர்பிஎப் வீரர்கள் சென்னைக்கும் அனுப்பப்பட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு மேலும் பல்வேறு கம்பெனியை சேர்ந்த ராணுவ வீரர்கள் சென்னைக்கு வந்ததும் அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தல்: 6 கிலோ தங்கம் பறிமுதல்