×

அசாம் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்

 

அசாம் முன்னாள் காங்கிரஸ் தலைவராக இருந்த பூபன்போரா கட்சியில் இருந்து விலகி பா.ஜவில் இணைந்தார். இதே போல் 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பா.ஜவில் இணைந்தனர். காங்கிரஸ் செல்வாக்கை சரிக்கவும், எப்படியாவது ஆட்சியை தக்க வைக்கவும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில் அசாம் காங்கிரசில் இருந்து மேலும் ஒரு முன்னாள் தலைவர் கந்தர்பா கலிதா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கவுரவ் கோகாய் காங்கிரஸ் ஊழியர்களை தனது ஊழியர்கள் என்று நினைக்கிறார். அவர்களை அடிமைகளைப்போல் நடத்துகிறார்.

இந்த அணுகுமுறை கட்சி உறுப்பினர்களிடையே ஆழ்ந்த வெறுப்பை உருவாக்கியுள்ளது. கோகாய்க்கு பிராந்திய அடையாள உணர்வும் அசாமின் நலன்களுக்கான அர்ப்பணிப்பும் இல்லை. அவருக்கு தேசியவாதம் இல்லை. ஜூபீன் கார்க்கிற்கு நீதி வழங்குவதாக வாக்குறுதி அளித்து வருகிறார், ஆனால் இவை மக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் கூறப்படும் பொய்யான வாக்குறுதிகள் தவிர வேறில்லை. அவர் ஒரு இளம் ராஜனா. அவர் கட்சிக்குள் அதிகார உணர்வுடன் நடந்துகொள்கிறார். மூத்த தலைவர் ரகிபுல் உசேன் தான் கட்சியை வழிநடத்துகிறார்’ என்று குற்றம்சாட்டினார்.

Tags : Assam Congress ,president ,Bhubanpora ,BJP ,Congress ,Assam ,Chief Minister ,Himanta Biswa… ,
× RELATED தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை...