×

தவெகவுடன் பாஜ கூட்டணி பேச்சா? நயினார் பரபரப்பு

 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி; நடிகர் விஜய்யின் தவெக, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் என்பதும், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வரும் தகவல்கள் அனைத்தும் முற்றிலும் வதந்தி தான். தமிழகத்தில் பாஜ எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது குறித்து அதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு அதனை உடனடியாக தெரியப்படுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். ‘ஜனநாயகன்’ வெளியிடுவதில் தணிக்கை வாரிய நெருக்கடி ஒருபுறம் இருக்க, தவெக வேட்பாளர் நேர்காணல் சந்திப்பு வைக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் நடிகர் விஜய்க்கு, சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது பாஜவின் அழுத்தம் தான் காரணமா என்ற கேள்விக்கு, சிபிஐ அவருக்கு இது 2வது அல்ல, 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. இது முதன்முறை அல்ல. இதற்கும், பாஜவிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

Tags : BJP ,Thaveka ,Nainar ,president ,Nainar Nagendran ,Kumbakonam, Thanjavur district ,Vijay ,National Democratic Alliance ,
× RELATED தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை...