திருத்துறைப்பூண்டி, மார்ச்.9: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நீதிமன்ற அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வேணுகோபால்(70) என்பவரிடம் மெதுவாக பெட்ரோல் போடுறீங்க என கேட்டு பிரச்சனையில் ஈடுபட்டும் அவரை தகாத வார்த்தையில் திட்டியும் அடித்தும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெட்ரோல் பங்க் ஊழியர் வேணுகோபால் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரகளையில் ஈடுபட்ட குன்னலூர் பகுதியைச் சேர்ந்த நித்திஷ்(22) மணக்குடி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (24)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
