- மகளிர் தினம்
- ஜோஸ் அலுகாஸ்
- கும்பகோணம்
- ஜோஸ் அலுகாஸ் ஆபரணம்
- சிஜோ
- துணை மேலாளர்
- லிஜோ
- கபிஸ்தலம் காவல் நிலையம்
- இன்ஸ்பெக்டர்
- மகாலட்சுமி, அறிஞர் அண்ணா
- மேல்நிலைப் பள்ளி…
கும்பகோணம், மார்ச் 8: கும்பகோணம் ஜோஸ் ஆலுக்காஸ் ஜூவல்லரியில் மகளிர் தின விழா கிளை மேலாளர் சிஜோ தலைமையில் நடைபெற்றது. துணை மேலாளர் லிஜோ முன்னிலை வகித்தார். இவ்விழாவில் சாதனைப் பெண்களான கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, அறிஞர் அண்ணா உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சரவணகுமாரி,
அறிஞர் அண்ணா நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கார்த்திகா, ஆசிரியை காந்திமதி, மென்பொருள் பொறியாளர் சினேகா பாலசுப்ரமணியம், மகளிர் திட்ட குழு தலைவி ராதிகா, ரயில்வே துறை சரண்யா ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து தங்கள் கருத்துக்களையும், சாதனைகளையும் பகிர்ந்து கொண்டனர். சாதனை பெண்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் அஷ்ரப் அலி செய்திருந்தார்.
