- நெடுஞ்சாலைகள்
- துறை
- கூட்டுறவு சங்கம்
- தஞ்சாவூர்
- தஞ்சாவூர் மாவட்ட நெடுஞ்சாலைத் துறை
- கூட்டுறவு சேமிப்பு
- சங்க உறுப்பினர்கள்
- கூட்டுறவு பதிவாளர்
- பன்னீர்செல்வம்
- சீனிவாசன்
- பழனிவேல்
- சந்திரசேகரன்...
தஞ்சாவூர், மார்ச் 9: தஞ்சை மாவட்ட நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்க உறுப்பினர்கள் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டுறவு சார்பதிவாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் சீனிவாசன், முன்னாள் செயலாளர் பழனிவேல், உதவியாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, விலகல் குறித்தும் பங்குத்தொகை வசூல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் தாங்கள் பெறும் கடனுக்கான தவணை தொகைகளை தவறாது செலுத்தினால், கடன் வழங்குவதற்கான கால தாமதத்தை தவிர்க்க முடியும். எனவே உறுப்பினர்க்ள கடனுக்கான தவணை தொகையை மாதம் தவறாமல் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.
