- பிரேக் சர்வதேச சதுரங்கம்
- அரவிந்த் சிதம்பரம்
- ஜோர்டன்
- அப்துஸ்ஸடோரோவ்
- பிரேக் சர்வதேச மாஸ்டர்ஸ் சதுரங்கப் போட்டி
- கிராண்ட் மாஸ்டர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நோடிர்பெக் அப்துஸ்ஸடோரோவ்
- உஸ்பெகிஸ்தான்
பிரேக்: பிரேக் சர்வதேச மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் நேற்று, டென்மார்க் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவை, தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம் வெற்றி கண்டார். இருப்பினும், புள்ளிப்பட்டியலில் உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் 5.5 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கிறார்.
செக் குடியரசின் பிரேக் நகரில் பிரேக் சர்வதேச செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. மாஸ்டர்ஸ் பிரிவில் நேற்று நடந்த 8வது சுற்று போட்டி ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் அரவிந்த் சிதம்பரம், டென்மார்க்கை சேர்ந்த ஜோர்டென் வான் ஃபாரீஸ்டை வெற்றி கண்டார். மற்றொரு போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டேவிட் நவாராவை, உஸ்பெக் கிராண்ட் மாஸ்டர் நோடிர்பெக் அப்துஸட்டோரோவ் அபாரமாக வீழ்த்தினார்.
இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டர் வின்சென்ட் கீமர் இடையிலான போட்டி டிராவில் முடிந்தது. மற்றொரு போட்டியில் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹான்ஸ் நீமான், ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் டேவிட் ஆன்டனை வெற்றி கண்டார். 8 சுற்றுகள் முடிவில் அப்துஸட்டோரோவ், 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். வான் ஃபாரீஸ்ட் 5 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும், டேவிட் நவரா 4.5 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும், அரவிந்த் சிதம்பரம் 4 புள்ளிகளுடன் 4ம் இடத்திலும் உள்ளனர்.
