- தர்ம
- ராமதாஸ்
- ஸ்ரீகாந்தி
- பமாகா அதிரடி
- ராமதாஸ்
- மகளிர் தினம்
- தாய்லாபுரம் தோட்டம்
- வில்லப்புரம் மாவட்டம் திண்டிவனம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் நேற்று நடந்த மகளிர் தினவிழாவில் பாமக செயல் தலைவரும் ராமதாஸ் மகளுமான ஸ்ரீகாந்தி பேசியதாவது: பெண்கள் எங்கே இருக்கிறார்களோ, அங்கே நிம்மதி இருக்கும், அன்பு இருக்கும், பாதுகாப்பு இருக்கும். நாம் வெறும் வீட்டைப் பராமரிக்கும் கைகள் மட்டுமல்ல, இந்தச் சமுதாயத்தை, இந்தத் தமிழ்நாட்டை, ஏன் இந்த உலகத்தையே தாங்கிப் பிடிக்கும் மகா சக்திகள்.
அரசியலில் பெண்கள் பங்களிப்பு என்பது வெறும் வாக்களிப்பதோடு நின்றுவிடக்கூடாது. நீங்கள்தான் மாற்றத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும். இன்று சிலர் பொய் பிம்பங்களை உருவாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற துடிக்கிறார்கள். ஆனால் உண்மையான உழைப்பும் தியாகமும் யாரிடம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். துரோகங்கள் நம்மைச் சூழ்ந்தாலும் தர்மம் நம் பக்கம் இருக்கிறது. பாமகவின் வெற்றியைப் பெண்களாகிய நாம் உறுதி செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
