- திமுக
- இந்திய சோசலிசக் கட்சி
- தேசியச் செயலாளர்
- தமீமுல் அன்சாரி நிஜாமி
- திருச்சி
- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
திருச்சியில் இந்திய சோசியலிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் தமீமுல் அன்சாரி நிஜாமி நேற்று அளித்த பேட்டி: கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மையினரை சகோதரர்கள் போல் நடத்தி உள்ளார். தேவையற்ற மதமோதல் ஏதுமின்றி இந்த ஆட்சியில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது.
மாநிலத்தின் சுயாட்சி உரிமைகளையும், இனம், மொழி, கொள்கை, தமிழரின் பண்பாட்டை திமுக அரசு சிறப்பாக நிலைநாட்டி வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்றோர் வரிசையில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். எனவே எதிர்வரும் தேர்தலில் திமுகவுடன் பயணிக்க உள்ளோம். எங்கள் ஆதரவு திமுகவிற்கு தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
