- யூனியன் பிரதேசம்
- பீகார்
- மேற்கு வங்கம்
- மத்திய அமைச்சர்
- நித்யானந்த் ராய்
- பாட்னா
- மத்திய உள்துறை இணை அமைச்சர்
- புர்னியா
- பப்பு யாதவ்
பாட்னா: பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் சில மாவட்டங்களை ஒன்றிணைத்து புதிய யூனியன் பிரதேசம் உருவாக்கப்படவுள்ளதாக வெளியாகும் தகவல்களை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பீகாரின் பூர்ணியா தொகுதி எம்.பி பப்பு யாதவ் கடந்த வாரம் பீகார், மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களை பிரித்து தனியாக யூனியன் பிரதேசம் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
பீகார் அரசியல் மாற்றங்கள் மற்றும் புதிய ஆளுநர் நியமனம் ஆகியவை இந்தத் திட்டத்தின் ஒரு பகுதி என்றும் அவர் பதிவிட்டிருந்தார். பப்பு யாதவின் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தனது ‘எக்ஸ்’ வலைதளப் பக்கத்தில் , \”பீகார் மற்றும் மேற்கு வங்கத்தின் சில மாவட்டங்களைப் பிரித்து யூனியன் பிரதேசம் உருவாக்கும் திட்டம் இருப்பதாகக் கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இது போன்ற ஆதாரமற்ற கருத்துக்களை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
