×

காங்கிரஸ் தலைமை முடிவெடுத்தால் முதல்வர் பதவியை விட்டுத்தர தயார்: முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மைசூருவில் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘முதல்வர் பதவி விவகாரத்தில் நானும், துணைமுதல்வர் டி.கே.சிவகுமாரும் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளோம். எங்கள் கட்சி தேசிய கட்சி. அதற்கு மேலிடம் உள்ளது. மேலிட தலைவர்கள் உள்ளனர். கட்சி தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். என்னை பொருத்தவரை கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்தால் வரும் 2027-28 மற்றும் 2028-29ம் ஆகிய இரு நிதியாண்டு பட்ஜெட் தாக்கல் செய்வேன்.

கட்சி தலைமை ஆட்சி அதிகாரத்தை விட்டு கொடுக்க வேண்டும் என்றால், மறு நிமிடமே முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பேன். இந்த விஷயத்தில் என்னுடைய விருப்பம் என்பது கிடையாது. கட்சி தலைமை மற்றும் மக்கள் விருப்பம் மட்டும் முக்கியம். மாநில மக்கள் நான் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இருப்பினும் கட்சி தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ என்றார்.

Tags : Chief Minister ,Congress ,Siddaramaiah Shivatam ,Bengaluru ,Karnataka ,Siddaramaiah ,Mysore ,Deputy Chief ,T.D. K. Shivakumar ,
× RELATED சபாநாயகர் ஓம் பிர்லாவை நீக்க...