×

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கவில்லை: ஈரான் தூதர் மறுப்பு

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றுமுன்தினம் கூறினார். இது பற்றி டிரம்ப் கூறுகையில், அவர்களிடம்(ஈரான்) வான் பாதுகாப்பு இல்லை. அனைத்து விமானங்களும் போய்விட்டன. தகவல் தொடர்புகள் போய்விட்டன. ஏவுகணைகள் போய்விட்டன. ஏவுதளங்கள் போய்விட்டன.

இப்போது ஒரு ஒப்பந்தம் செய்வதற்கு வருவதாக சொன்னார்கள். நீங்கள் தாமதமாக வந்தீர்கள். இப்போது அவர்களை விட சண்டை போட நாங்கள் விரும்புகிறோம் என்றார். இது பற்றி,எகிப்து நாட்டின் ஈரான் தூதர் மொஜ்தாபா பெர்தோஸி பவுரிடம் கேட்ட போது,அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2 முறை தோல்வியடைந்து போரில் முடிவடைந்த பின்னர் நம்பிக்கையின்மை அத்தகைய ஈடுபாட்டை சாத்தியமற்றதாக்குகிறது. மேலும் அதிபர் டிரம்பை நம்ப முடியாது என்றார்.

Tags : US ,Israel ,Iran ,President Trump ,Trump… ,
× RELATED ‘நிபந்தனையற்ற சரணாகதி’ அடைவதைத் தவிர...