×

ஐக்கிய அரபு வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் வேண்டுகோள்

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் நேற்று அளித்த பேட்டி: இந்தியாவில் வாழும் 150 கோடி இந்தியர்களின் சார்பில் வளைகுடா நாடுகளில் வாழும் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்திருந்த வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்கள் முதலீடுகளை திரும்ப பெறப்போவதாக அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை அனைவருக்கும் கொண்டு வந்து சேர்க்கும். இதற்காக இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் சார்பில் டெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள தூதரகங்கள், துணைத் தூதரகங்களிலும் 24 மணி நேரமும் அலுவலகங்கள் இயங்கும். இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி எந்தவித சிரமமும் இல்லாமல் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நீங்கள் முதலீடு செய்ய முடியும்.

மற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட குறைந்த முதலீட்டில் நீங்கள் இங்கு தொழில் தொடங்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியிடம் 950 பில்லியன் டாலர் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் வேண்டுகோளாக வைக்கிறேன். விரைவில் போரை முடித்து அமைதி திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : UAE Gulf ,India ,Indian Haj Association ,President ,Chennai ,Abubakar ,Ramadan ,Gulf ,US ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை