×

41 பேர் பலிக்கு காரணமே விஜய்தான்: பொறுப்பு ஏற்காம, பழி போடுறாங்கன்னு சொல்றாரு: லெப்ட் ரைட் வாங்கிய சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு தவறை ஏற்றுக் கொண்டு உணர்ந்து கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு ஒரு மிகப்பெரிய மனப்பக்குவம் வேண்டும்; அது ஒரு பெரிய மனித மாண்பு. கரூரில் நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லை என்று விஜய் கூறுகிறார். அவர் அங்கு வரவில்லை என்றால் கூட்டம் கூடி இருக்காது, கூட்டம் கூடவில்லை என்றால் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நடந்திருக்காது. முதன்மையான காரணி, காரணம் விஜய்தான்.

தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டது; அதற்கு நானும் ஒரு பொறுப்பு ஆகிவிட்டேன். அதனால் நான் மக்களிடம் எனது மனத் துயரத்துடன் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சொன்னால் அது முடிந்துவிடும். ஆனால் அவர் என் மீது பழியைப் போட்டுவிட்டீர்கள் என்கிறார். அது சரியாக இல்லை. ஆனால் அவர் அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் கூறுகிறார். கரூரில் மட்டுமல்ல அவர் கலந்து கொண்ட முதல் மாநாட்டிலேயே மரணம் நிகழ்ந்துவிட்டது.
தவெகவினர் கட்டுப்பாட்டுடன் இல்லை. மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது 15 லட்சம் பேர் கூடுவார்கள்.

அப்போது நெரிசலில் எந்த உயிரிழப்பும் இல்லை. அழகர் வந்து காவல்துறை சரியான பாதுகாப்பு வழங்குவதில்லை என்று புகார் அளிப்பதில்லை. அங்கு எல்லோரும் பக்தியுடன் கூடுகிறார்கள், அதனால் கண்ணியமும் ஒழுங்கும் உள்ளது. எங்கள் கட்சிக் கூட்டத்தில் கொள்கையுடன் கூடுவதால் ஒழுங்கு உள்ளது. தவெகவில் அது இல்லை என்பதால் நெரிசல் உண்டாகிவிடுகிறது. அதைத் தவிர்க்கவேண்டும். முக்கியமான பொறுப்பாளர்களுக்குப் பயிற்சி வழங்க வேண்டும். விஜய் அதைச் சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* ‘மம்தாவை நினைத்து பரிதாபப்படுகிறேன்’
‘‘ஆளுநருக்கு ஒரு முறைதான் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் அவருக்கு தொடர்ந்து மூன்று முறை வாய்ப்பு வழங்கப்பட்டது. இங்கு இருக்கும்போது நமக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தார் என்பது தெரியும். புதுச்சேரியிலும் கிரண்பேடியை வைத்து நாராயணசாமியை ஒழுங்காக பணி செய்ய விடவில்லை. மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால்தான் ஆர்.என்.ரவியை அங்கு மாற்றுகிறார்கள்.

கேரள, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் அவர்களுக்கு சிக்கலாக உள்ளது. அவர்கள் ஆட்சியில் இல்லாத இடங்களில் ஆளுநர்களை கொண்டு மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு நகர்வையும் இடையூறு செய்வார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு செயல்படுத்தும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஆளுநரிடம் ஒப்புதல் கையெழுத்துப் பெறும் முறையே தவறானது. மேலும் தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தற்போது மேற்குவங்கத்திற்கு போகிறார். பாவம் மம்தாவை நினைத்துப் பரிதாபப்படுகிறேன்’’ என்று சீமான் தெரிவித்தார்.

Tags : Vijay ,Seeman ,Naam Tamilar Party ,Chennai ,Karur… ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை