×

தாமரையை தொடுங்க… பணம் கொட்டும்ங்க… வலைதளங்களில் வலை விரிக்கிறாங்க… உஷார்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வந்து கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர். பாஜ கட்சியினர் சமூக வலைத்தள பிரசாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் தாமரை சின்னத்தை தொட்டால் ரூ.5,000 வங்கிக்கணக்கில் ஏறும் என்ற தகவல் பரவி வருகிறது.

இதைக்கண்ட பலரும் தாமரை சின்னத்தை தொட்டதும், அடுத்தடுத்து பல கேள்விகள் வருகிறது. இதற்கு ஒன்றன்பின் ஒன்றாக பதிலளித்ததும், திடீரென இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இவ்வாறு தாமரையை தொட்ட பலரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். சிலர் இதனை சமூக வலைத்தளங்களிலும் ஷேர் செய்கின்றனர். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், ‘‘சமூக வலைத்தளங்களில் தேர்தல் போல விளம்பரப்படுத்தி தாமரை சின்னத்தை தொட்டால் பணம் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் மோசடி பிரசாரத்தை பரப்பி வருகின்றனர்.

ஆனால், அது உண்மையானது இல்லை. இதுவும் ஒருவகையான ஏமாற்றுவேலை தான். இதை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். தங்களது வங்கி கணக்கு மற்றும் ரகசிய விபரங்களை பகிர்ந்தால் வங்கி கணக்கில் இருக்கும் பணம் பறிபோக வாய்ப்புள்ளது. எனவே, யாரும் இதுபோன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம்’’ என்றனர்.

Tags : Tamil Nadu Assembly general elections ,DMK ,AIADMK ,Modi ,Amit Shah ,Tamil Nadu ,BJP ,
× RELATED எத்தனை சீட், எந்த சின்னம்? கமல் கட்சி ஆலோசனை