×

கோவைன்னா அக்கா… தம்பி…மட்டும் தான்

தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜ., அதிமுக கூட்டணியில் கோவையில் 10 தொகுதிகளில் பாஜ.வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் அதிமுக சிட்டிங் எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராமன் தொகுதியை விட்டு கொடுக்காமல் நங்கூரமாக இருந்து வருகிறார்.

இதேபோல், வானதி கடந்த தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வென்று எம்எல்ஏ ஆனார். அவர் தனது தொகுதியில் சொல்லிக்கொள்ளும்படி எந்த திட்டத்தையும் கொண்டு வராததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இந்த முறை வானதி வடக்கு தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த தொகுதியானது அதிமுக விடம் தற்போது உள்ளது.

ஆனாலும் வடக்கில் கால் வைக்க வானதி தீவிர முயற்சி செய்து வருகிறார். இது தவிர பாஜ நிர்வாகிகள் வசந்தராஜன், மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில நிர்வாகிகள் நந்தகுமார், செல்வக்குமார் என ஏராளமானோர் சீட் கேட்டு முயற்சித்து வருகின்றனர். ஆனால் கோவையை பொறுத்த வரை 2 சீட் தான். ஒன்று வானதி சீனிவாசன் மற்றொன்று அண்ணாமலை ஆகியோருக்கு தான் என கட்சி தலைமை கூறிவிட்டதாக கூறப்படுகின்றது

பாஜவில் கோவை என்றால் ஒன்று அக்கா….. மற்றொன்று தம்பி…… இந்த இரண்டு முகங்களை தவிர வேறு யாரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் இருவரும் குறியாக இருந்து காய்களை நகர்த்துகின்றனர் என்றும், மற்றவர்கள் எல்லாம் கடைசி வரைக்கும் வாழ்க கோஷம் மட்டுமே போட வேண்டும் என்றும் இருவரும் எதிர்பார்க்கின்றனர் என நிர்வாகிகள் குமுறுகின்றனர்.

Tags : Coimbatore ,BJP ,AIADMK alliance ,National Democratic Alliance ,Annamalai, Singanallur ,AIADMK… ,
× RELATED வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.60...