×

ஐக்கிய அரபு வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும்: அபூபக்கர் வேண்டுகோள்!

 

ஐக்கிய அரபு வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்தியாவில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வளைகுடா நாடுகளில் மிக முக்கியமான கல்ஃப் நியூஸுக்கு அவர் அளித்துள்ள பிரத்தியேக பேட்டியில்; இந்தியாவில் வாழும் 150 கோடி இந்தியர்களின் சார்பில் வளைகுடா நாடுகளில் வாழும் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். போர் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலீடு செய்திருந்த வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் அனைவரும் இந்தியாவில் முதலீடு செய்வது மிகப்பெரிய ஒரு முன்னேற்றத்தை அனைவருக்கும் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. தனிநபர் வருமானமும் அதிகரித்து வருகிறது. எனவே இந்தியாவில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களுக்கு ஒரு சொர்க்க பூமியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இதற்காக இந்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் சார்பில் புதுடெல்லியில் 24 மணி நேரமும் இயங்கும் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.வளைகுடா நாடுகளில் உள்ள தூதரகங்கள்,துணைத் தூதரகங்களிலும் 24 மணி நேரமும் அலுவலகங்கள் இயங்கும்.

இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி எந்தவித சிரமமும் இல்லாமல் ஒற்றைச் சாளர முறையில் (சிங்கிள் விண்டோ சிஸ்டம்) நீங்கள் முதலீடு செய்ய முடியும்.மற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட குறைந்த முதலீட்டில் நீங்கள் இங்கு தொழில் தொடங்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியிடம் 950 பில்லியன் டாலர் கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் வேண்டுகோளாக வைக்கிறேன். விரைவில் போரை முடித்து அமைதி திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

 

 

Tags : Gulf ,India ,Abu Bakr ,Indian Hajj Association ,Gulf News ,
× RELATED வெல்லமண்டி நடராஜனுக்கு அதிமுகவில் பதவி