×

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ‘ஈடி’ ரெய்டு

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 2026ம் ஆண்டில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானியின் 3,716 கோடி ரூபாய் மதிப்புள்ள ‘அபோட்’ இல்லத்தை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்திருந்தது.

இந்த நிலையில், இன்று ரிலையன்ஸ் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள 10 முதல் 12 இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘அனில் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தொடர்பான நிதி பரிமாற்றங்களை ஆய்வு செய்து வருகிறோம்.

வங்கி கடன்களை முறைகேடாக பயன்படுத்தியது மற்றும் பொது நிதியை கையாடல் செய்தது குறித்து முக்கிய ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். 40,000 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி புகாரில் ஏற்கனவே சிக்கியுள்ள ரிலையன்ஸ் குழுமத்திற்கு, இன்றைய சோதனை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : ED ,Anil Ambani ,Mumbai, Hyderabad ,Mumbai ,CBI ,Reliance Communications ,Bank of Baroda ,
× RELATED ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல்...