×

ஆசிய மகளிர் கால்பந்து இந்தியா அதிர்ச்சி தோல்வி

பெர்த்: ஏப்சி ஆசிய மகளிர் கால்பந்தாட்ட போட்டியில் நேற்று, வியட்நாமிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஏப்சி ஆசிய மகளிர் கால்பந்தாட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் சி-யில் நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய மகளிர், வியட்நாம் மகளிர் அணியுடன் மோதினர். போட்டியின் 30வது நிமிடத்தில் வியட்நாமின் நிகான் தி வான்சு முதல் கோல் போட்டார். அதற்கு பதிலடியாக இந்தியாவின் சான்பிடா நோங்ரும், 52வது நிமிடத்தில் அணியின் முதல் கோல் போட்டு சமன்படுத்தினார். அதன் பின் கடைசி நேரம் வரை கோல் விழவில்லை. அப்போது ஸ்டாப்பேஜ் நேரத்தில், 90+4வது நிமிடத்தில் வியட்நாமின் நிகான் தி வான்சு மேலும் ஒரு கோல் போட்டு அசத்தினார். அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை, வியட்நாம் வீழ்த்தியது.

Tags : Asian Women ,Football ,India ,Perth ,Vietnam ,AFC Asian Women's Football Championship ,Perth, Australia ,Group ,women ,
× RELATED டி20 உலகக்கோப்பை: இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து அணி!