பெரும்பாலும் ஆண்டுகளை எண்களாலேயே குறிப்பிடுகின்றோம். ஆனால், தமிழ் ஆண்டுகள் அறுபதும் அறுபது பெயர்களால் அழைக்கப்படுகின்றன. கீழே 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்களும், அதற்கு இணையான ஆங்கில ஆண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் 60 தமிழ் ஆண்டுகளுக்குரிய அபிமான தேவதைகள் விருட்சங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.சுழற்சி முறையில் 60 தமிழ் வருடங்கள்60 தமிழ் வருடங்களின் பெயர்களும், சுழற்சி முறையில் 60 வருடங்களுக்கு ஒரு முறை வந்து கொண்டே இருக்கும். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்திற்கு செல்லும் வழியில், உள்ள 60 படிக்கட்டுகளிலும், இந்த 60 தமிழ் வருடங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதை காணலாம்.
வருஷாதி விருட்சங்களின் சிறப்பு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேஷராசியில் சனியும் குருவும் சந்திப்பார்கள். அதனையடுத்து வரும் 60 ஆண்டுகளிலும் ஒவ்வொரு ஆண்டிலும் இவ்விரு கிரகங்களின் சஞ்சார நிலைகளுக்கேற்பவே இந்த வருஷாதி விருட்சங்களை வகுத்தளித்துள்ளார்கள், நமது முன்னோர்கள். குரு மற்றும் சனியின் நிலையை ஒட்டியே ஒருவரின் ஜீவன் குடும்ப பொருளாதார சூழல் அமையும். எனவே, குறிப்பிட்ட ஆண்டில் பிறந்தவர்கள் அவர்களுக்கான பிறந்த ஆண்டின் விருட்சங்களை நட்டு பராமரித்து வந்தால், அவர்களின் வாழ்க்கைச்சூழல் நன்மையடையும்.
சார்வாரி
ஆங்கில ஆண்டுகள்:
1960 – 1961, 2020 – 2021.
அபிமான தேவதை – பாஸ்கரன்.
விருட்சம் – துணா.
பிலவ
ஆங்கில ஆண்டுகள்:
1961 – 1962, 2021 – 2022.
அபிமான தேவதை – அக்கினி.
விருட்சம் – நெல்லி.
சுபகிருது
ஆங்கில ஆண்டுகள்:
1962 – 1963, 2022 – 2023.
அபிமான தேவதை – ஜாதவேதன்.
விருட்சம் – பலா.
சோபகிருது
ஆங்கில ஆண்டுகள்:
1963 – 1964.
2023 – 2024.
அபிமான தேவதை – ஸஹோஜன்.
விருட்சம் – பவழமல்லி.
குரோதி
ஆங்கில ஆண்டுகள்:
1964 – 1965.
2024 – 2025.
அபிமான தேவதை – அஜிராபிரபு.
விருட்சம் – புங்கம்.
விஸ்வாவசு
ஆங்கில ஆண்டுகள்:
1965 – 1966.
2025 – 2026.
அபிமான தேவதை – வைஸ்வாநரன்.
விருட்சம் – புத்திரசீவி.
பராபவ
ஆங்கில ஆண்டுகள்:
1966 – 1967.
2026 – 2027.
அபிமான தேவதை – நர்யாபஸன்.
விருட்சம் – புரசு.
பிலவங்க
ஆங்கில ஆண்டுகள்:
1967 – 1968.
2027 – 2028.
அபிமான தேவதை – பங்க்திராதஸன்.
விருட்சம் – புளியம்.
கீலக
ஆங்கில ஆண்டுகள்:
1968 – 1969.
2028 – 2029.
அபிமான தேவதை – விஸர்பி.
விருட்சம் – புன்னை.
சௌம்ய
ஆங்கில ஆண்டுகள்:
1969 – 1970.
2029 – 2030.
அபிமான தேவதை – மத்ஸ்யமூர்த்தி.
விருட்சம் – பூவரசு.
சாதாரண
ஆங்கில ஆண்டுகள்:
1970 – 1971.
2030 – 2031.
அபிமான தேவதை – கூர்மமூர்த்தி.
விருட்சம் – மகிழம்.
விரோதிகிருது
ஆங்கில ஆண்டுகள்:
1971 – 1972.
2031 – 2032.
அபிமான தேவதை – வராஹமூர்த்தி.
விருட்சம் – மஞ்சகடம்பை.
பரிதாபி
ஆங்கில ஆண்டுகள்:
1972 – 1973.
2032 – 2033.
அபிமான தேவதை – நரசிம்மமூர்த்தி.
விருட்சம் – மரா.
பிரமாதீச
ஆங்கில ஆண்டுகள்:
1973 – 1974.
2033 – 2034.
அபிமான தேவதை – வாமனமூர்த்தி.
விருட்சம் – மருதம்.
ஆனந்த
ஆங்கில ஆண்டுகள்:
1974 – 1975.
2034 – 2035.
அபிமான தேவதை – ஸ்ரீராமன்.
விருட்சம் – மலைவேம்பு.
ராஷஸ
ஆங்கில ஆண்டுகள்:
1975 – 1976.
2035 – 2036.
அபிமான தேவதை – பரசுராமன்.
விருட்சம் – மா.
நள
ஆங்கில ஆண்டுகள்:
1976 – 1977.
2036 – 2037.
அபிமான தேவதை – பலராமன்.
விருட்சம் – முசுக்கொட்டை.
பிங்கள
ஆங்கில ஆண்டுகள்:
1977 – 1978.
2037 – 2038.
அபிமான தேவதை – கிருஷ்ணன்.
விருட்சம் – முந்திரி.
காளயுக்தி
ஆங்கில ஆண்டுகள்:
1978 – 1979.
2038 – 2039.
அபிமான தேவதை – கல்கி.
விருட்சம் – கொழுக்கட்டை மந்தாரை.
சித்தார்த்தி
ஆங்கில ஆண்டுகள்:
1979 – 1980.
2039 – 2040.
அபிமான தேவதை – புத்தர்.
விருட்சம் – தேவதாரு.
ரௌத்ரி
ஆங்கில ஆண்டுகள்:
1980 – 1981.
2040 – 2041.
அபிமான தேவதை – துர்க்கை.
விருட்சம் – பனை.
துர்மதி
ஆங்கில ஆண்டுகள்:
1981 – 1982.
2041 – 2042.
அபிமான தேவதை – யாதுதானன்.
விருட்சம் – ராமன்சீதா.
துந்துபி
ஆங்கில ஆண்டுகள்:
1982 – 1983.
2042 – 2043.
அபிமான தேவதை – பைரவர்.
விருட்சம் – மஞ்சள்கொன்றை.
ருத்ரோத்காரி
ஆங்கில ஆண்டுகள்:
1983 – 1984.
2043 – 2044.
அபிமான தேவதை – அனுமன்.
விருட்சம் – சிம்சுபா.
ரக்தாஷி
ஆங்கில ஆண்டுகள்:
1984 – 1985.
2044 – 2045.
அபிமான தேவதை – சாரதை (சரஸ்வதி).
விருட்சம் – ஆலசி.
குரோதன
ஆங்கில ஆண்டுகள்:
1985 – 1986.
2045 – 2046.
அபிமான தேவதை – தாஷாயணி.
விருட்சம் – சிவப்பு மந்தாரை.
அக்ஷய
ஆங்கில ஆண்டுகள்:
1986 – 1987.
2046 – 2047.
அபிமான தேவதை – லட்சுமி.
விருட்சம் – வெண்தேக்கு.
