×

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்தம்: அலுவலகங்கள் வெறிச்சோடியது

நீடாமங்கலம்,மார்ச் 4: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது. வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சங்கத்தினர் அதனைத் தொடர்ந்து கடந்த 25ஆம் தேதி முதல் மாவட்ட தலைநகரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் நீடாமங்கலம் தாலுகா அலுவலகம் வெறிச்சோடி உள்ளது. ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு தாலுகா அலுவலகத்தில் பல்வேறு சான்றிதழ்கள் வாங்க வருகை தரும் பொது மக்கள் தினம் தினம் ஏமாற்றத்துடன் செல்கின்றனர்.  இதனால் அலுவலகப்பணிகள் முற்றிலும் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : Federation of Revenue Unions ,Needamangalam ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்