×

இதெல்லாம் வெட்டி உதார்: விஜய்யை விளாசிய சத்யராஜ்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் புகழரங்கம் நிகழ்ச்சி அம்பத்தூரில் நடந்தது. இதில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது: டயலாக் பேசுவது வேறு மேடை. மேட்டரே இல்லாம பேசி ஈசியாக கைத்தட்டல் வாங்கலாம். என்மா கண்ணு…(கூட்டத்தில் இருந்து கைத்தட்டல்). இதெல்லாம் வெட்டி உதார். இதை எல்லா நடிகர்களுக்கும் செய்யத் தெரியும். நடிகர்கள் எது பேசினாலும் கைதட்டுவார்கள்.

எம்ஜிஆர் தீவிர ரசிகனாக இருக்கும் நான் திமுக மேடையில் இருக்க காரணம் சித்தாந்தம் தான். ஒரு அமைப்பை எம்ஜிஆர் எவ்வளவு வெறுத்தார் என ஒரு வீடியோ உள்ளது. தேர்தல் நேரத்தில் காட்டுவேன். சினிமா பார்ப்பார்கள், வேடிக்கை பார்ப்பார்கள், சினிமா நடிகர்களை பார்க்க கூட்டம் வரும், கைதட்டுவார்கள். ஆனால் நம்முடைய குடும்பம் ஐந்து வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்தது, தற்பொழுது எப்படி உள்ளது என ஒவ்வொரும் தமிழ்நாட்டு குடிமக்களின் மனசாட்சிக்கு தெரியும்.

இந்தாண்டு நடைபெறும் தேர்தலில் இந்த கட்சிக்கும், அந்த கட்சிக்கும்தான் போட்டி என்று கூறுகிறார்கள். அப்படி இல்லை. இந்த தேர்தல் சமூக நீதிக்கும் சனாதனத்துக்கும் நடக்கும் போட்டி. தமிழ்நாட்டை அயோத்தியாக மாற்றுவதற்கான சகுனித்தனம் செய்கின்றனர். அதுதான் திருப்பரங்குன்றத்தில் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Vijayya Vlasiya Satyaraj ,Tamil Nadu ,Mu. K. Stalin ,Ambattur ,Sathyaraj ,Eye ,
× RELATED இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான்...