×

சின்னமுட்டம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கன்னியாகுமரி, மார்ச் 4: சின்னமுட்டம் மீன் பிடித்துறைமுகம் அருகே நேற்று முன்தினம் மாலை கன்னியாகுமரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவர் சின்னமுட்டம், விடிவெள்ளி தெருவை சேர்ந்த சகாய கோபட்காப்சன் (24) என்பதும், மொத்தமாக கஞ்சாவை வாங்கி சில்லறையாக விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. உடனே அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர்.

Tags : Chinnamuttam ,Kanyakumari ,Chinnamuttam fish pond ,
× RELATED சர்வதேச மகளிர் தின விழா 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்