×

வானூர் அருகே கிளியனூரில் பழங்குடியினர் இடம் ஆக்கிரமிப்பு கணவன், மனைவி தற்கொலை முயற்சி

விழுப்புரம், மார்ச் 3: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆக்கிரமிப்புகளை கண்டித்து பழங்குடியின தம்பதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு அளிக்க வந்த வானூர் அருகே கிளியனூரை சேர்ந்த லட்சுமணன், அவரது மனைவி தவசெல்வி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி திடீரென தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில், பழங்குடியினரான காட்டு நாயக்கன் சாதியை சேர்ந்தவர்கள்.

இந்த இடத்தில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் வசிக்கும் இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் ஓட்டல் மற்றும் அம்மன் சிலை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகிறார். இதுகுறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியதன் பேரில் கிளியனூர் காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். ஆனால் சிலையை எடுக்கிறேன் என்று கூறி இதுவரை ஆக்கிரமிப்புகளை எடுக்கவில்லை. இதனால் நாங்கள் குடியிருக்க இடமின்றி சிரமத்துக்குள்ளாகி வருவதாக தெரிவித்தனர். இதனை கேட்டறிந்த போலீசார் கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். இதுபோன்று போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Kilianur ,Vanur ,Villupuram ,Villupuram district ,Villupuram Collectorate ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி...