×

மதுரை உட்பட 6 மாவட்டங்களில் பிளஸ் 2 தேர்வில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவ-மாணவிகள்

 

மதுரை: மதுரை உட்பட 6 மாவட்டங்களில் நடந்த பிளஸ் 2 ேதர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளா இன்று நாளான தமிழ் உட்பட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடந்தது. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 109 தேர்வு மையங்களில் 323 பள்ளிகளை சேர்ந்த 34 ஆயிரத்து 502 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை தேர்வு நடந்தது. தேர்வு மையங்களை பறக்கும் படையினர் கண்காணித்தனர். மேலும் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 67 மையங்களில் 7099 மாணவர்கள், 7527 மாணவிகள் என மொத்தம் 14,626 பேர், விருதுநகர் மாவட்டத்தில் 99 மையங்களில் 9 ஆயிரத்து 855 மாணவர்கள், 11,715 மாணவிகள் என மொத்தம் 21,670 பேர், திண்டுக்கல் மாவட்டத்தில் 88 மையங்களில் 9962 மாணவர்கள், 11,457 மாணவிகள் என மொத்தம் 21,419 பேர், சிவகங்கை மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் 7,351 மாணவர்கள், 8,803 மாணவிகள் என மொத்தம் 16,154 பேர், தேனி மாவட்டத்தில் 51 தேர்வு மையங்களில் 141 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சுயநிதிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 6,301 மாணவர்கள் 6,859 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதினர்.

 

Tags : Madurai ,Plus ,Plus 2 general election ,Tamil Nadu ,
× RELATED பொள்ளாச்சி அருகே ஆழியார்...