×

திருத்துறைப்பூண்டியில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம்

திருத்துறைப்பூண்டி,மார்ச் 2: திருத்துறைப்பூண்டியில் இலவச இருதய நோய் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் 450 பேர் பயனடைந்தனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ரோட்டரி சங்கமம் மற்றும் கோவை கே.ஜி. மருத்துவமனை சார்பில் இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வைத்தார். மாவட்ட முன்னாள் ஆளுநர் கோவிந்தராஜ், துணை ஆளுநர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் முகாமை துவக்கி வைத்தார். முகாமில் தலைமை மருத்துவர் டாக்டர் நித்யன் கொண்ட மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர். இதில் 450 பேர் பயன் பெற்றனர். முகாமில் முன்னாள் தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் கார்திகைசெல்வன் நன்றி கூறினார்.

 

Tags : Thiruthuraipoondi ,Rotary Sangamam ,Tiruvarur district ,Coimbatore K.G. Hospital ,Rotary Association… ,
× RELATED வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்