×

இது புதுச்சேரி கூத்து மாஹேயில் போட்டியிட ஆள் பிடிக்கும் பாஜ

புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில், ஏனாம் பகுதி ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதேபோல் மாஹே பகுதி கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்துக்கு அருகே உள்ளது. ஏனாமில் கூட ஆளும் கட்சியான என்.ஆர் காங்கிரஸ், பாஜ சார்பில் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளனர். ஆனால் மாகே தொகுதியில் அரசியல் களநிலவரம் வேறு மாதிரியாக இருக்கிறது. கேரளாவின் அரசியல் காற்று அங்கேயும் வீசுவதால் இடதுசாரிகளும், காங்கிரசும் மாகே தொகுதியில் எப்போதும் வலிமையாக இருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் சிபிஎம் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றிப்பெற்றார். கடந்த 2021ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ்பரம்பத் வெற்றிபெற்று எம்எல்ஏவாகியுள்ளார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அப்துல்ரகுமான் 3,532 ஓட்டுகளை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்தை பெற்றார்.

எப்போதும் மாகேவை பொறுத்தவரை காங்கிரஸ் அல்லது இடதுசாரி ஆதரவு வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும் என்ற சூழலில் ஆளும் கட்சிகளான என்.ஆர் காங்கிரஸ், பாஜ ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை இந்த தொகுதியை என்.ஆர் காங்கிரசுக்கு, பாஜ தள்ளிவிட்டதால், இந்தமுறை மாகே தொகுதியை பாஜ வைத்து கொள்ளட்டும் என ரங்கசாமி கறாராக கூறிவிட்டாராம். பாஜ தரப்பில் இப்போதிலிருந்து வேட்பாளர்களை தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

Tags : BJP ,Puducherry ,Koothu Mahe ,Yenam ,East Godavari district ,Andhra Pradesh ,Mahe ,Kannur district ,Kerala ,NR Congress ,BJP.… ,
× RELATED சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி...