புதுடெல்லி: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் இருந்து டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 23 பேரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக சிபிஐ தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் கிரிமினல் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் தொடக்க நிலையில் ஆதாரங்களை மேலோட்டமாக மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதியை மீறி, நீதிபதி சிறிய அளவிலான விசாரணையையே நடத்தி இந்த விவகாரத்தில் ஆதாரங்களை நிராகரித்துள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது வரும் ஒன்பதாம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
