×

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ரூ.3.59 கோடியில் புதிய அங்காடிகள்

ஊத்துக்கோட்டை, பிப்.28: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடி மற்றும் புதிய கடைகளுக்கு எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களுக்கு தேவையான இறைச்சி பொருட்கள் வாங்க இங்குள்ள பழைய பேரூராட்சி பின்புறம் உள்ள இறைச்சி கடைகளுக்கு வந்து இறைச்சி பொருட்கள் வாங்கிச்செல்வார்கள். இங்குள்ள இறைச்சி கடை வியாபாரிகள் வசதி இல்லாமல் தரையிலேயே அமர்ந்து வியாபாரம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த கலெக்டரிடம் இறைச்சி கடை வியாபாரிகள் நாங்கள் தரையில் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறோம். எங்களுக்கு புதிதாக கடைகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, தினசரி அங்காடிகள் மற்றும் புதிய கடைகள் கட்டுவதற்கு தமிழக அரசு 2025-2026ம் ஆண்டு மூலதன மானிய நிதித்திட்டம் ரூ.3.59 கோடி மதிப்பீட்டில் தினசரி அங்காடிகள் மற்றும் புதிய கடைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.

இதையொட்டி, நேற்று அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில், பேரூராட்சி தலைவர் அப்துல் ரஷீத் தலைமை தாங்கினார். திருவள்ளூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார், செயல் அலுவலர் சதீஷ், பேரூராட்சி துணைத்தலைவர் குமரவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், திமுக அவைத்தலைவர் வெங்கடேசன், ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பூமிபூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கோகுல்கிருஷ்ணன், கோல்டுமணி, ஜீவா, திரிபுரசுந்தரி, ஜெயராமன், பார்த்திபன், சம்சுதீன், ரகீம், நரேஷ், திலீப் உட்பட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், தலைமை எழுத்தர் முருகவேல் நன்றி கூறினார்.

Tags : Oputhukottai Baruradchi Oothukottai ,MLA ,TDA ,Oputhukottai district ,J. Govindarajan ,Pudukkottai Borough ,
× RELATED கிருஷ்ணா தண்ணீர் ஜீரோ பாயின்டில்...