×

கூட்டணி குறித்து 28ம்தேதிக்குள் தெரியும்: ராமதாஸ்

 

திண்டிவனம்: கூட்டணி குறித்து வரும் 28ம் தேதிக்குள் தெரியும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். திண்டிவனத்தில் பாமக, வன்னியர் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், செய்தியாளர்களை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது அவரிடம், திராவிட கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா, இருக்காதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இருக்கும்… இருக்கும்… என்றார்.

நீங்கள் எழுதிய மடலில் நமக்கான வாகனம் ரெடி ஆகிடுச்சு, அதில் ஏறுவதற்கு தயாராவோம் என கூறியுள்ளீர்களே என்ற கேள்விக்கு, அது தேர்தல் வாகனம்தான் என்றார். 28ம்தேதிக்குள் தேர்தல் கூட்டணி தொடர்பான முடிவை எதிர்பார்க்கலாமா? என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராமதாஸ், 28ஆம் தேதிக்குள் தெரியும், எந்த வாகனத்தில் போறோம்ன்னு… என்றார். தொடர்ந்து கூட்டம் நடைபெற்று வருகிறது.

Tags : Ramadas ,Dindivanam ,Phamaka ,Akkatsi ,Palamaka ,Vanniyar Sangha State ,
× RELATED திமுக ஆதரவுடன் மாநிலங்களவை தேர்தலில்...