×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

சென்னை: தென் தமிழகம் மற்றும் கொங்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளார் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் குறிபாக தென் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பதிவாகிவருகிறது. இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதே போல தென்காசி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மற்றும் கொங்கு மாவட்டங்களான ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என கூறியுள்ளார்.

தமிழகத்தில் குளிர்கால மழை கடந்த 2 மாதங்களாக பதிவாகிவருகிறது. இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அடுத்து வரகூடிய தினங்களில் தென் மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Chennai ,Pradeep John ,South Tamil Nadu ,Kongu ,
× RELATED ரூ.117.65 கோடியில் நெல்லை, விருதுநகர்,...