×

தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசன பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்

அந்தியூர், பிப்.21: அந்தியூர் அருகே உள்ள தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதியில் நெல் வயல்கள் உள்ளது. இதன் இரண்டாம் போக நெற்கதிர்கள் தற்போது நன்கு முற்றிய நிலையில் இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ளது. 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் இரண்டாம் போக நெல் ரகமான ஏடிடி 38, ஐஆர் 50, டீலக்ஸ் பொன்னி உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளது.

120 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த சன்ன ரக நெற்கதிர்கள் தற்போது நன்கு விளைந்துள்ளது. சவுண்டப்பூர், அம்மாபாளையம், ராக்கனாம்பாளையம், மேவாணி, பெருந்தலையூர், கருங்கரடு, வரப்பள்ளம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் இன்னும் 20 நாட்களில் நெல் அறுவடை துவங்க உள்ளது. தற்போது நெற்கதிர்கள் நன்கு முற்றிய நிலையில் குலை தள்ளிய நிலையில் வயல் வெளிகளில் காண்போரை பரவசப்படுத்தி வருகிறது.

 

 

Tags : Thadapalli Arakan Kottai ,Anthiyur ,
× RELATED ரயில்வே பணி மனையில் மயங்கி கிடந்தவர் சாவு