×

பிரதமர் மோடி தனி விமானத்தில் 28ம் தேதி சென்னை வருகை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தனி விமானத்தில் வரும் 28ம் தேதி சென்னைக்கு வர உள்ளார். பிரதமர் மோடி, மார்ச் 1ம் தேதி, புதுச்சேரி மாநிலத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதற்காக, வரும் 28ம் தேதி (சனிக்கிழமை) இரவு 8.45 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில், சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கு பாஜ, அதிமுக கூட்டணி கட்சியினர் பிரதமரை வரவேற்கின்றனர்.

பின்னர் சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு, கிண்டி ஆளுநர் மாளிகை செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார். மறுநாள் மார்ச் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணியளவில், கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.40 மணியளவில் சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். காலை 10.45 மணியளவில் அங்கிருந்து, தனி விமானம் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு, தேர்தல் பிரசாரத்திற்கு செல்கிறார்.

பிரதமரின் சென்னை வருகையையொட்டி, டெல்லியில் உள்ள பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை குழுவினர், நேற்று சென்னை விமான நிலையம் வந்து ஆய்வு செய்தனர். அதன் பின்பு சென்னை பழைய விமான நிலையத்தில், முக்கிய பிரமுகர்கள் தங்கக்கூடிய ஓய்வு அறையில், பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், டெல்லியில் இருந்து வந்திருந்த சிறப்பு பாதுகாப்பு படை குழு ஐஜி, தமிழக போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : PM Modi ,Chennai ,Modi ,Assembly elections ,Tamil Nadu ,New Delhi ,Puducherry ,
× RELATED ‘வெற்றிவேல்’ யாருக்கு?