×

ஊழியர்கள் பணிக்கு வராததால் தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பூட்டு

தாம்பரம், பிப்.26: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்து சில நாட்களாக வருவாய்த் துறையினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பலர் போராட்டம் காரணமாக பணிக்கு வரவில்லை. இதனால் வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டது. இதனால், பல்வேறு கோரிக்கைகளுக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர். ஊழியர்கள் பணிக்கு வரவில்லை என்றால் அலுவலகத்தில் இருந்து யாராவது ஒருவர் பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யாமல் அலுவலகத்தையே பூட்டி வைப்பது எந்த விதத்தில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அலுவலகத்தை பூட்டிய சம்பந்தப்பட்ட அலுவலர் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tambaram Taluk Office ,Tambaram ,Revenue Department ,
× RELATED காஞ்சி-வந்தவாசி சாலை, செவிலிமேடு...