×

ஓமலூர் அருகே எஸ்ஐயை தாக்கி பணம் பறித்த இளம்பெண் குண்டாசில் கைது

ஓமலூர் : ஓமலூரில் போலீஸ் எஸ்ஐயை தாக்கி பணம், நகை பறித்த வழக்கில் கைதான இளம்பெண்ணை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் சிறை வைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் காவல்நிலையத்தில் எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் பூபதி.

இவருக்கு தீவட்டிப்பட்டி அருகேயுள்ள பூசாரிப்பட்டி கொரவனூரை சேர்ந்த அலமேலு (25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒரு வழக்கு தொடர்பாக ஓமலூர் ஸ்டேஷனுக்கு அலமேலு வந்தபோது, தான் ஒரு வக்கீல் எனக்கூறி எஸ்ஐ பூபதியிடம் பேசியுள்ளார்.

பிறகு அலமேலுவிற்கு ரூ.92 ஆயிரம் வரை எஸ்ஐ பூபதி கொடுத்துள்ளார். இந்த பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறி கடந்த ஜனவரி மாதத்தில் எஸ்ஐ பூபதியை தனது வீட்டிற்கு அலமேலு வரவழைத்துள்ளார்.

அங்கு இருவரும் தனிமையில் இருக்கும்போது, உள்ளே 4 பேர் புகுந்துள்ளனர். அவர்கள், செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, எஸ்ஐ பூபதியை தாக்கி 3.5 பவுன் நகை, ரூ.27 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு விரட்டிவிட்டனர்.

இதுபற்றி தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட அலமேலு, அவரது கூட்டாளிகளான வீரவளவன் (எ) முருகேசன் (36), செல்லா (எ) செல்வம் (28), திருமால் அழகன் (21), பிரவீன்குமார் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

விசாரணையில் அலமேலு, வக்கீல் இல்லை என்பதும், அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்திருப்பதும், பணம் பறிப்பதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டதும் தெரிந்தது. கைதான அலமேலு உள்ளிட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் கைதான வீரவளவன், திருமால் அழகன், செல்வன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் குண்டர் தடுப்பு காவலில் மாவட்ட போலீசார் சிறை வைத்தனர். இதைதொடர்ந்து, எஸ்ஐயிடம் நகை, பணம் பறிப்பில் ஈடுபட்ட அலுமேலுவையும் குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க கலெக்டர் பிருந்தாதேவிக்கு மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் பரிந்துரை செய்தார்.

இப்பரிந்துரையை ஏற்று, அலமேலுவை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்க கலெக்டர் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு ஆணையை சேலம் பெண்கள் கிளைச்சிறையில் உள்ள அவரிடம் போலீசார் வழங்கினர்.

Tags : SI ,Omalur ,Bhupathi ,station ,Salem district ,Theevattipatti… ,
× RELATED பெரியபுலியூர் கிராமத்தில் இளைஞர்களை...