- உச்ச நீதிமன்றம்
- புது தில்லி
- தேசிய பசுமை தீர்ப்பாயம்
- பங்கஜ் மித்தல்
- எஸ்.வி.என். பட்டி
- உச்ச நீதிமன்றம்...
புதுடெல்லி: திடக்கழிவு மேலாண்மை விதிகள் தொடர்பான விவகாரத்தில் முன்னதாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து மனுவை பரிசீலனை செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,” வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை இனி ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் என்று நான்கு வகைகளாகப் பிரித்து வழங்க வேண்டும்.
மேலும் உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளைச் சேகரிக்க நான்கு தனித்தனி அறைகளைக் கொண்ட பிரத்யேக வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும். நாடு முழுவதும் அனைத்து கழிவு மேலாண்மை உள்கட்டமைப்புகளும் மார்ச் 31-க்குள் தயார் செய்து, ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த விதிகள் முழு வீச்சில் அமலுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
