×

வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பு தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு

புதுடெல்லி: வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில், வாக்குப்பதிவு நாளில் வாக்குச் சாவடிகளில் பணியமர்த்தப்பட உள்ள மாநில காவல்துறையினர் ரேண்டமாக பணியமர்த்தப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தல் பாதுகாப்பு குறித்து அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் சார்பில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் போலீசார் பட்டியல் அடிப்படையில் பணியமர்த்தப்படாமல் சீரற்ற முறையில் அதாவது ரேண்டமாக தேர்வு செய்து பணியமர்த்தப்பட வேண்டும். அப்படி தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டால் நடுநிலைமை உறுதி செய்யப்படும்.

பாரபட்சத்தைத் தவிர்க்க உள்ளூர் காவல்துறையினர் தற்போதைய காவல் நிலையப் பகுதிகளுக்கு வெளியே பணியமர்த்தப்படுவது போல் இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதே போல் எஸ்பிக்கள், மாநில அதிகாரிகளும் ரேண்டமாக பணியமர்த்தப்படுவார்கள். இந்த புதிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்பிக்கள், காவல் ஆணையர்கள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் துறை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

* மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை
அனைத்து மாநில தேர்தல் ஆணையங்களுடன் தேர்தல் ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நாள் மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் கமிஷன் இணையதளம், வாக்காளர் பட்டியல்களைப் பகிர்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. 1999ஆம் ஆண்டுக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து நேற்று நடந்த இந்த மாநாட்டில் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

Tags : Security Election Commission ,New Delhi ,Election Commission ,Tamil Nadu ,Kerala ,Puducherry ,Assam ,West Bengal ,
× RELATED யுபிஎஸ்சி குடிமைப் பணித்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!