×

புதிய செயற்பொறியாளர் பதவியேற்பு

திருப்பரங்குன்றம், பிப். 21: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு பொதுப்பணித்துறை மூலம் நியமனம் செய்யப்பட்ட புதிய செயற்பொறியாளர பதவியேற்றுக் கொண்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு கட்டுமானம் உள் கட்டமைப்பு, பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள், டெண்டர், பல்கலைக்கழக வளாக பராமரிப்பு, உணவு விடுதி ஆகிய பணிகளை மெற்கொள்ள பொறியியல் பிரிவு இயங்கி வருகின்றது.

இந்த பிரிவிற்கு செயற்பொறியாளர் பொறுப்பில் உள்ள அதிகாரி நியமிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக செயற்பொறியாளர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனால் பல்வேறு பணிகள் தேக்கமடைந்தும், சில பராமரிப்பு பணிகளில் குளறுபடியும் இருந்து வந்தது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்கலைக்கழகத்திற்கு பொதுப்பணித்துறை மூலம் புதிய செய்ற்பொறியாளரை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று புதிய செய்ற்பொறியாளராக என்.நீலகண்டன் பதவி ஏற்றார். இவருக்கு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

 

 

Tags : Thiruparankundram ,Public Works Department ,Madurai Kamaraj University ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்