×

ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை கல்லூரியில் விளையாட்டு விழா

ஒட்டன்சத்திரம், பிப். 21: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை அருட்திரு ஜேக்கப் நினைவு கிறிஸ்துவ கல்லூரியில் 27வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி செயலர் முனைவர் நிர்மலா ஜெயராஜ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் பினித் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தேசிய நல்லசிரியர் விருது பெற்ற குட்வின் ராஜ்குமார் கலந்து கொண்டார்.

விழாவில் கராத்தே போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்ற சண்முகப்பிரியா, கெல்வின் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கபட்டது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை நிர்வாக அலுவலர் ஜெயபாரதி ஒருங்கிணைப்பு செய்திருந்தார். உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

 

 

Tags : Ambilika College ,Ottanchathiram ,annual ,festival ,Rev. Jacob Memorial Christian College ,Ambilika ,College Secretary ,Dr. ,Nirmala Jayaraj ,College Principal ,Pinith Muthukrishnan ,
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க...