×

திருத்துறைப்பூண்டியில் உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழி

திருத்துறைப்பூண்டி, பிப். 21: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் உலகத் தாய்மொழி தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், ஆணையர் கிருத்திகா ஜோதி முன்னிலையில் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம்.

தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்நாளும் உழைத்திடுவோம். அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம். குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம். இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

Tags : World Mother Language Day ,Thiruthuraipoondi ,Thiruthuraipoondi Municipality ,Council ,Kavita Pandian ,Commissioner ,Krithika Jyothi ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்