- காவேரி நதி
- கும்பகோணம்
- மகாகாளியம்மன்
- மகா கதாய் அம்மன்
- மகா மாரியம்மன்
- பாணத்துரை தென்மேற்கு சாலை
- கும்பகோணம் கழகம்
கும்பகோணம், பிப்.21: கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பாணாதுறை தென்மேற்கு வீதியில் மகா காளியம்மன், மகா காத்தாயி அம்மன், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடமுழுக்கு நடத்தி பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிந்த நிலையில் நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை முதற்கால யாகசாலை பூஜையும், இன்று காலையில் 2ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை மங்கள இசையுடன் விக்னேஸ்வர பூஜை, திரவிய ஹோமமும், பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு நடைபெற்று, முக்கிய நிகழ்ச்சியாக காலை 10.30 மணிக்கு விமான குடமுழுக்கும், 11 மணிக்கு மூலவருக்கு குடமுழுக்கும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
