×

அரியலூர் காவலர்களுக்கு ஆயுதப்படையில் புத்தாக்கப்பயிற்சி

ஜெயங்கொண்டம், பிப். 21: அரியலூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் முதல் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை உள்ள காவல்துறையினருக்கு அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் 6 நாட்கள் புத்தாக்க பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் ஒரு பேட்ச்க்கு 40 காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

இதில் இரண்டு பேட்ச் வகுப்புகள் நடைபெற்றுள்ளது. பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு சிறந்து விளங்கி முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த காவல்துறையினரை அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் வரவழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

 

Tags : Ariyalur police ,Jayankondam ,Ariyalur District Armed Forces ,Ariyalur District Police ,
× RELATED பெருங்குடி குப்பை கிடங்கை சீரமைக்க...