×

சீர்காழி நகர் பகுதி கடைகளில் 500 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல்

சீர்காழி, பிப்.20: சீர்காழி நகர் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பாலிதீன் பைகளை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகர் பகுதியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதாக வந்த தகவலின்பேரில் சீர்காழி நகராட்சி ஆணையர் மஞ்சுளா உத்தரவின்பேரில் நகராட்சி ஊழியர்கள் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் சுமார் 500 கிலோ பறிமுதல் செய்து ரூபாய் 50,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் மஞ்சுளா, சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தெரிவிக்கையில், தொடர்ந்து சுகாதார கேடு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாலிதீன் பைகளை கடைகளில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

 

Tags : Sirkazhi Nagar ,Sirkazhi ,Mayiladuthurai district ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்