×

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீர்வு

சிவகிரி, பிப்.21: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செண்பகவல்லி அணை பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று வாசுதேவநல்லூரில் நடைபெற்ற கருத்தரங்கில் திமுகவின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ் விஜயன் தெரிவித்தார். வாசுதேவநல்லூரில் திமுக சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் டெல்லி சிறப்பு பிரநிதி ஏகேஎஸ் விஜயன் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தொடரும். முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீர்வு காணப்படும்’ என்றார். இதைதொடர்ந்து ராஜா எம்எல்ஏ, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தனுஷ் எம் குமார் ஆகியோர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் ரத்தினவேலு, ராமராஜ், நாகராஜ், கணேசன், கங்காதரன், எஸ்விசி கல்லூரி சேர்மன் முருகையா, திருப்பதி ராஜன், கருத்தபாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன், மாநில மருத்துவரணி துணை செயலாளர் செண்பக விநாயகம், ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டியன், அன்புக்கரசு, கிறிஸ்டோபர், கடற்கரை, நகரச் செயலாளர்கள் அந்தோணிசாமி, நாகூர் கனி, பேரூர் செயலாளர்கள் ரூபி பாலசுப்பிரமணியன், குருசாமி, நல்ல சிவன், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட சார்பு அணி துணை அமைப்பாளர்கள் டாக்டர் சுமதி வேலுச்சாமி, கார்த்திக், கட்டபொம்மன், மாடசாமி, மைதீன் கனி, முத்துக்குமார், சங்கர், சுந்தர், பொன்ராஜ், ஆசிரியர் முத்தரசு உள்பட பலர் கலந்து கொண்டனர் .

Tags : Senbhagavalli Dam ,Chief Minister ,M.K. Stalin ,Sivagiri ,DMK ,Delhi ,AKS Vijayan ,Vasudevanallur ,Tamil Nadu ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்