×

முக்காணியில் இலவச மருத்துவ முகாம்

ஆறுமுகநேரி, பிப். 21: முக்காணி சமுதாய நலக் கூடத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம், நெல்லை வைகறை ஓமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த இம்முகாமிற்கு தலைமை மருத்துவர் துரைராஜ் தலைமை வகித்தார். கிராம உதயம் நிர்வாக மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார் தன்னார்வத் தொண்டர் ஆரிய நாச்சியார் வரவேற்றார். முகாமில் மருத்துவர்கள் தேவி, ஞானகுமார், மாரியப்பன், ஆரிபா, சேசுமதி ஆகியோர் கலந்து கொண்டு 132 மருத்துவ பயனாளிகளுக்கு பொது மருத்துவம் மற்றும் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். கிராம உதயம் நிர்வாகிகள் ஆனந்த் செல்வன், செல்வன் துரை, ராம லக்ஷ்மி, சீதாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.

Tags : Mukkani ,Arumuganeri ,Mukkani Community Welfare Centre ,Mela Azhwardhoppu Grama Udayam ,Nellai Vaikarai Homeopathy Hospital ,Research Centre ,Chief Doctor ,Durairaj… ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்