×

மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர் சங்க கிளை பொதுக்குழு கூட்டம்

தூத்துக்குடி, பிப். 21:தமிழ்நாடு மாநகராட்சி, நகராட்சி ஓய்வூதியர் சங்க மாநகர கிளை பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடியில் நடந்தது. மாநகர தலைவர் மாடசாமி தலைமை வகித்தார். இதில் ஓய்வுபெற்ற சமூக நலத்துறை அலுவலர் சேகர், விதவைகள் சங்க மாவட்ட தலைவர் சங்கீதா ரமேஷ், மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர் சங்க மாநகர நிர்வாகிகள் மேரி, சண்முகவேல், ராஜ், ஜெயசீலன், வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1000 ஆக உயர்த்தி வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புத் தொகைக்கான வட்டியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Corporation ,Municipal Pensioners' Association Branch General Committee Meeting ,Thoothukudi ,Tamil Nadu Corporation ,Municipal Chairman ,Madasamy ,Retired ,Social Welfare Officer ,Shekar ,Widows' Association District ,President ,Sangeetha Ramesh ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்