சிவகாசி, பிப். 20: சிவகாசி அருகே உடல்நலம் பாதித்தவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி அருகே கட்டளைப்பட்டியை சேர்ந்தவர் முருகன்(57). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முருகனின் மகன் பொன்னுப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
