×

பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு

தேனி, பிப். 20: பெரியகுளம் நகர் வடகரை பட்டாப்புளி தெருவை சேர்ந்தவர் சேதுராமன். இவரது மனைவி லதா. கடந்த 16ம் தேதி இரவு லதாவின் தங்கை கணவர் விக்னேஷ் என்பவரிடம் பெரியகுளம் வடகரை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த சலீம் மற்றும் அவரது மனைவி ஆபீதாபேகம் ஆகியோர் தகராறு செய்துள்ளனர்.

இதை தட்டி கேட்ட லதாவை சலீம், அவரது மனைவி ஆபிதா பேகம், இவர்களது மகன் பாசித் ரஹ்மான் மற்றும் மகள் ஆகியோர் சேர்ந்து சாதியை சொல்லி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லதா அளித்த புகாரின் பேரில், பெரியகுளம் போலீசார் சலீம் உட்பட 4 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Tags : Theni ,Sethuraman ,Pattapuli Street, Vadakarai, Periyakulam Nagar ,Latha ,Salim ,
× RELATED மதுபாட்டில்கள் பறிமுதல்